Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : முதல் உள்ளூர் தமிழ் ஆவணப் படம் “அந்த நாள்” – தொலைக்காட்சித் தொடர்...

ஆஸ்ட்ரோ : முதல் உள்ளூர் தமிழ் ஆவணப் படம் “அந்த நாள்” – தொலைக்காட்சித் தொடர் “அக்டோபர் 22”

719
0
SHARE
Ad

  • டிசம்பரில் முதல் ஒளிபரப்பாகும் உள்ளூர் தமிழ் ஆவணப்படம் ‘அந்த நாள்’ மற்றும் தமிழ் நாடக டெலிமூவி ‘அக்டோபர் 22’-ஐ ஆஸ்ட்ரோவில் கண்டு மகிழுங்கள்

கோலாலம்பூர் : இவ்வாண்டு இறுதியில், ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் உள்ளூர் தமிழ் ஆவணப்படமான ‘அந்த நாள்’ மற்றும் தொலைக்காட்சித் தொடரான (நாடக டெலிமூவி) ‘அக்டோபர் 22’ ஆகியவற்றை முறையே டிசம்பர் 18 மற்றும் டிசம்பர் 25 ஆகியத் தேதிகளில் ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் எதிர்ப்பார்க்கலாம்.

விருது வென்ற உள்ளூர் திரைப்பட இயக்குநர், இந்திராணி கோபால் தயாரிப்பிலும் மாறன் பெரியண்ணன்  இயக்கத்திலும் மலர்ந்த ‘அந்த நாள்’, 1920கள் முதல் 1990கள் வரையிலான நிஜ வாழ்க்கை நிகழ்வுகளையும் அனுபவங்களையும் சித்தரிக்கிறது.

#TamilSchoolmychoice

உள்ளூர் திறமையாளர், கபிலன் கந்தசாமி தொகுத்து வழங்கும் இந்த ஆவணப்படம், மேற்கொண்ட நேர்காணல்கள் மூலம் பேரார்வம், விரக்தி மற்றும் வெற்றி ஆகியவற்றைப் பற்றிய மலேசியக் கதைகளைச் சித்தரிக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8 மணிக்கு, முதல் ஒளிபரப்புக் காணும் ‘அந்த நாள்’ ஆவணப்படத்தின் புதிய அத்தியாயங்களைக் கண்டு மகிழுங்கள்.

ஏ.பன்னீர்செல்வம், சித்திரா தேவி, எம்.எஸ் லிங்கம், பத்துமலை ராஜூ மற்றும் ஜமுனா ராணி நடித்த ‘அக்டோபர் 22’ எனும் தொலைக்காட்சித் தொடரையும்  வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். நவ்ரோஸ் கான் இயக்கத்தில் மலர்ந்த இந்த டெலிமூவி, பள்ளி நாட்களில் சித்ரா என்ற தனதுக் காதலியின் நினைவுகளை மீண்டும் நினைவுக்கூரும், செல்வம் என்ற முதியவரைச் சித்தரிக்கிறது.

இருப்பினும், சித்ரா டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுக் கடந்தக் கால நினைவுகளை மறந்து விட்டார் என்பது அவருக்குத் தெரியாது.

டிசம்பர் 25, இரவு 7 மணிக்கு, முதல் ஒளிபரப்புக் காணும் ‘அக்டோபர் 22’ எனும் நாடக டெலிமூவியைக் கண்டு மகிழுங்கள்.

மேல் விபரங்களுக்கு, content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.