கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் நேற்று வியாழக்கிழமை இரவு கோலாலம்பூரிலுள்ள தேசிய இருதய மருத்துவமனையில் (ஐஜேஎன்) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கான சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்து அவர் நலமடைய டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட பல தலைவர்கள் செய்திகளை வெளியிட்டனர்.
கடந்த வாரத்தில் “கேப்சரிங் ஹோப்” (Capturing Hope) என்ற தலைப்பிலான ஆங்கில நூலை மகாதீர் எழுதி வெளியிட்டார்.
96 வயதான மகாதீர் 1989-இல் முதன் முறையாக இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து இரண்டாவது இருதய அறுவைச் சிகிச்சையை அவர் மேற்கொண்டார்.
அவர் நலமடைய அனைவரும் பிரார்த்திப்போம் என பக்காத்தான் ஹாரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தன் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டார்.