Home நாடு வெள்ளம் : சிலாங்கூரில் மட்டும் இதுவரை 10 மரணங்கள்

வெள்ளம் : சிலாங்கூரில் மட்டும் இதுவரை 10 மரணங்கள்

576
0
SHARE
Ad
ஷா ஆலாம், தாமான் ஶ்ரீ மூடாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி

ஷா ஆலாம் : பொருளாதார வளர்ச்சியிலும், மேம்பாடடைந்த மாநிலம் என்ற வகையிலும் நாட்டின் முதல் நிலை மாநிலமாகத் திகழ்வது சிலாங்கூர் மாநிலமாகும். ஆனால், அண்மைய சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையினாலும் அதனால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளாலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாகவும் சிலாங்கூர் உருவெடுத்துள்ளது.

இதுவரையில் வெள்ளத்தினால் சிலாங்கூரில் மட்டும் 10 பேர்  மரணமடைந்துள்ளனர். நான்கு மரணங்கள் ஷா ஆலாமிலும், மூன்று மரணங்கள் காஜாங்கிலும், 1 மரணம் சுங்கை பூலோவிலும் நிகழ்ந்தன.

ஷா ஆலாமில் நிகழ்ந்த 4 மரணங்களில் 3 பேர் தாமான் ஶ்ரீ மூடாவில் வெள்ளத்தில் மூழ்கியதால் சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் ஆவர்.

#TamilSchoolmychoice

சிலாங்கூரின் 9 மாவட்டங்களில் இதுவரையில் மொத்தம் 32,044 பேர் வெள்ளப் பாதிப்புகளினால் 162 தற்காலிக நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். கிள்ளான் மாவட்டத்தில் மட்டும் 18,858 பேர் வெள்ளப் பாதிப்புகளினால் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்தத் தகவல்களை சிலாங்கூர் மாநில காவல் துறைத் தலைவர் அர்ஜூனாய்டி முகமட் வெளியிட்டார்.