Home நாடு மூடா கட்சி 100 மணி நேரத்தில் 1 மில்லியன் திரட்டியது

மூடா கட்சி 100 மணி நேரத்தில் 1 மில்லியன் திரட்டியது

498
0
SHARE
Ad

கோலாலம்பூர் : வெள்ளப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் மக்களுக்கு உதவுவதற்கான தீவிரப் பணிகளில் மூடா கட்சி இறங்கியுள்ளது.

இதற்காக தங்களுக்கு உதவிநிதி தேவைப்படுவதாக வேண்டுகோள் விடுத்தார் மூடா கட்சியின் தேசியத் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான். அடுத்த 100 மணி நேரத்தில் 1,045,600 ரிங்கிட் தொகை தங்களுக்குக் கிடைத்திருப்பதாக சைட் சாதிக் விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்தப் பணம் முழுக்க முழுக்க வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கே செலவிடப்படும் என்ற உறுதியையும் வழங்கிய சைட் சாதிக், அதற்கான நடைமுறைகளும் ஒழுங்குபடுத்தப்படும் என்றார்.

#TamilSchoolmychoice

மூடா கட்சி சார்பில் தன்னார்வப் பணியாளர்கள் நாடு முழுமையிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர்.

கீழ்க்காணும் இணைப்பின் வழி அவர்கள் உதவி தேவைப்படுபவர்களை அணுகி வருகின்றனர் என்றும் சைட் சாதிக் தெரிவித்தார்.

maribantu.my/pasca