Home நாடு மகாதீர் குணமடைந்தார்! அடுத்த சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவார்!

மகாதீர் குணமடைந்தார்! அடுத்த சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவார்!

1055
0
SHARE
Ad

கோலாலம்பூர் : வியாழக்கிழமை இரவு (டிசம்பர் 16) கோலாலம்பூரிலுள்ள தேசிய இருதய மருத்துவமனையில் (ஐஜேஎன்) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் முழுமையாக குணமடைந்திருப்பதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்தது.

அடுத்த சில நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மீதான பரிசோதனைகள் முடிவடைந்து விட்டதாகவும், அந்தப் பரிசோதனைகள் திருப்திகரமாக இருந்ததாகவும் ஐஜேஎன் மருத்துவமனை தெரிவித்தது.

#TamilSchoolmychoice

அவருக்கான சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்து அவர் நலமடைய டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட பல தலைவர்கள் செய்திகளை வெளியிட்டிருந்தனர்.

கடந்த வாரத்தில் “கேப்சரிங் ஹோப்” (Capturing Hope) என்ற தலைப்பிலான ஆங்கில நூலை மகாதீர் எழுதி வெளியிட்டார்.

96 வயதான மகாதீர் 1989-இல் முதன் முறையாக இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து இரண்டாவது இருதய அறுவைச் சிகிச்சையை அவர் மேற்கொண்டார்.