Home நாடு வெள்ளம் : சிலாங்கூரில் மட்டும் 17 பேர் உயிரிழந்தனர்

வெள்ளம் : சிலாங்கூரில் மட்டும் 17 பேர் உயிரிழந்தனர்

768
0
SHARE
Ad

ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலம் முழுமையிலும் ஏற்பட்ட வெள்ளம், அடை மழை காரணமாக இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் சடலங்கள் இன்றுவரை மீட்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி (படம்) அறிவித்தார்.

இருப்பினும் இவர்களின் மரணத்துக்கான காரணங்கள் இன்னும் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இதுவரையில் 4,672 குடும்பங்களில் இருந்து 30,632 பேர் 203 வெள்ளி நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.