Home நாடு வெள்ளம் வடிகிறது – தஞ்சம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது

வெள்ளம் வடிகிறது – தஞ்சம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது

998
0
SHARE
Ad
ஷா ஆலாம், தாமான் ஶ்ரீ மூடாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி

கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாக சில மாநிலங்களில் மோசமானப் பாதிப்புகளை ஏற்படுத்திய வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளப் பாதிப்புகளினால் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்திருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையத் தொடங்கியிருக்கிறது.

நேற்று வரையில் மலாக்கா மாநிலத்தில் மட்டும் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை அதே அளவில் இருந்து வருகிறது.

சிலாங்கூர், பகாங், கிளந்தான், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய 5 மாநிலங்களில் 210 நிவாரண மையங்களில் 33,7790 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

சிலாங்கூரில் 83 நிவாரண மையங்களில் 15,404 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை நேற்று  நண்பகல் வரையில் 16,568 ஆக இருந்தது.

பகாங்கில் 125 மையங்களில் 17,738 பேர் நேற்று மாலை 4.00 மணிவரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பகாங் மாநிலத்தில் வெள்ளத்தினால் மூடப்பட்டிருந்த பல சாலைகள் கட்டம் கட்டமாகப் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளன.