Home நாடு அஞ்சல் வாக்காளர்கள் சரியான நேரத்திற்குள் வாக்குகளை அனுப்பிவிடுங்கள் – தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

அஞ்சல் வாக்காளர்கள் சரியான நேரத்திற்குள் வாக்குகளை அனுப்பிவிடுங்கள் – தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

555
0
SHARE
Ad

ECபுத்திர ஜெயா, ஏப்ரல் 23 – வெளிநாடுகளில் வாழும் அஞ்சல் வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டுகளைப் பெற்றவுடன் உடனடியாக அதை நிரப்பி சம்பந்தப்பட்ட மலேசியத் தூதரகங்களில் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதனால் கடைசி நேர சிக்கலகளைத் தவிர்க்கலாம் என்று தேர்தல் ஆணைய துணைத்தலைவர் டத்தோ வான் அகமத் வான் ஓமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அஞ்சல் வாக்களார்கள் தாங்களே தனிப்பட்ட முறையில், அஞ்சல் வழியாக தங்களது வாக்குகளை அனுப்பி வைக்கலாம் ஆனால் மலேசிய தூதரகங்களின் மூலம் அனுப்பும் போது அவை சம்பந்தப்பட்ட தொகுதிகளை சரியான நேரத்தில் வந்தடையும்.

#TamilSchoolmychoice

மேலும் வெளிநாடுகளில் வாழும் மலேசியர்கள் தங்கள் வாக்குகளைப் பாதுகாப்பான முறையில் செலுத்த சம்பந்தப்பட்ட மலேசியத் தூதரகங்கள் உதவி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.