அஜித் இரசிகர்கள் மட்டுமின்றி, தன் தலைவிதி எப்படி இருக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ள, படத் தயாரிப்பாளர் போனி கபூரும் ஆவலுடன் காத்திருக்கும் படம் “வலிமை”. மறைந்த முன்னாள் நடிகை ஶ்ரீதேவியின் கணவர்தான் போனி கபூர்.
நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 30) மாலையில்தான் வலிமை படத்தின் முன்னோட்டம் சமூக ஊடங்களில் வெளியிடப்பட்டது. அதற்குள்ளாக 8 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டிவிட்டது படத்தின் முன்னோட்டம்.
மோட்டார் சைக்கிள்களின் பந்தயம், மோதல்கள் என பிரம்மாண்டமான காட்சிகளுடன் அனைவரையும் கவர்ந்து வருகிறது வலிமை முன்னோட்டம்.
நாமும் அதைப் பார்ப்போமா?
Comments