Home கலை உலகம் விஸ்வரூபம் விவகாரம்: தமிழ் நாட்டில் தீர்ப்பு நாளை ஒத்தி வைப்பு

விஸ்வரூபம் விவகாரம்: தமிழ் நாட்டில் தீர்ப்பு நாளை ஒத்தி வைப்பு

705
0
SHARE
Ad

Visvaroopam-Slider--2

 

 

#TamilSchoolmychoice

 

 

 

 

 

 

 

 

சென்னை, ஜனவரி 28,  — விஸ்வரூபம் விவகாரத்தில்,சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை நாளை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.

நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம்திரைப்படத்தில் சர்ச்சைக்குரியகாட்சிகள் இருப்பதாகக் கூறி எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, படத்தைதமிழகத்தில் திரையிட மாநில அரசு தடை விதித்தது.

தடைக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன்தரப்பில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு நேற்று முன்தினம் விஸ்வரூபம் படத்தை பார்த்து ஆய்வு செய்தது. இதில், தயாரிப்பு நிறுவனம், ரசிகர்கள் மற்றும் மனுதாரர்கள் தரப்பிலும் பிரதிநிதிகள் அந்தப்படத்தை பார்த்தனர்.

இந்நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டநிலையில் தீர்ப்பு நாளை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதால், தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.