Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : முதல் ஒளிபரப்புக் காணும் ‘இறைவி திருமகள் காடு’- உள்ளூர் தமிழ் திரில்லர்

ஆஸ்ட்ரோ : முதல் ஒளிபரப்புக் காணும் ‘இறைவி திருமகள் காடு’- உள்ளூர் தமிழ் திரில்லர்

970
0
SHARE
Ad

  • ஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணும் ‘இறைவி திருமகள் காடு’ எனும் உள்ளூர் தமிழ் திரில்லர் தொடரைக் கண்டு மகிழுங்கள்.
  • ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் மார்ச் 3 முதல் ஒளிபரப்புக் காணுகின்றது

மார்ச் 3, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் ‘இறைவி திருமகள் காடு’ எனும் உள்ளூர் தமிழ் திரில்லர் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

உள்ளூர் திரைப்பட இயக்குநரான எஸ்.டி .புவனேந்திரன் கைவண்ணத்தில் மலர்ந்த, 22-அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடரில் மூன் நிலா, செயிண்ட் டிஎஃப்சி, இர்பான் ஜைனி, சூர்யா பிரகாஷ், ரத்ன கௌரி, துர்காஷினி, செல்லினா ஜெய், வினோஷன் மற்றும் யவனேஷ் உள்ளிட்டப் பிரபலமான உள்ளூர் நடிகர்கள் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இறைவி திருமகள் காடு கிராமத்தில் உள்ள மர்மமான மற்றும் பழமையானக் கோவிலைப் பற்றியக் கதையை இந்தத் தொடர் சித்தரிக்கின்றது. கிராமம் நிலப்பிரச்சினைக்கு உள்ளாகும் தருணத்தில், கிராமவாசிகளும் கோயில் சம்பந்தப்பட்ட, பல தீர்க்கப்படாத மர்மங்களை எதிர்கொள்கின்றனர். கிராம மக்களுக்கு உதவுவதற்காகக் கோயிலிலுள்ள அம்மன் மனித உருவில் காட்சியளிக்கிறார் என்றும் கிராமவாசிகள் நம்புகின்றனர்.

இறைவி திருமகள் காடு தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டுக் களியுங்கள். அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.