Home உலகம் ஸ்டாலின் துபாய் நகரில் தமிழ் நாடு முதலீட்டாளர்களை வரவேற்றார்

ஸ்டாலின் துபாய் நகரில் தமிழ் நாடு முதலீட்டாளர்களை வரவேற்றார்

759
0
SHARE
Ad

துபாய் : கடந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தனது முதல் வருகையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டிருக்கிறார்.

துபாய் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துபாய் 2020 கண்காட்சிக் கூடத்திற்கும் வருகை தந்தார் ஸ்டாலின். அங்கு தமிழ் நாடு கண்காட்சிக் கூடத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.

முதலீட்டாளர்களிடையே உரையாற்றிய ஸ்டாலின் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரும்படி மத்திய கிழக்கு முதலீட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

#TamilSchoolmychoice

ஸ்டாலினுடன் அவரின் துணைவியார் துர்க்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், உதயநிதியின் மனைவி ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர்.