Home கலை உலகம் ஆஸ்ட்ரோ தொடர் : “நடுநிசி கே. எல்.” இயக்குநருடன் ஒரு சிறப்பு நேர்காணல்: ஆர். அசிசான்

ஆஸ்ட்ரோ தொடர் : “நடுநிசி கே. எல்.” இயக்குநருடன் ஒரு சிறப்பு நேர்காணல்: ஆர். அசிசான்

544
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோவில் அண்மையில் ஒளியேறி தொலைக்காட்சி நேயர்களை அதிகளவில் கவர்ந்த தொடர் “நடுநிசி கேஎல்”. ஒவ்வொரு தொடரிலும் ஒரு கதை சொல்லப்பட்டது.

நடுநிசி கேஎல் தொடரைப் பார்க்கத் தவறியவர்கள் ஆஸ்ட்ரோ ஒன் டிமாண்டில் எப்போது வேண்டுமானாலும் பார்த்து மகிழலாம்.

நடுநிசி கே. எல். இயக்குநர் ஆர்.அசிசானுடன் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணல்:

ஆர்.அசிசான்
#TamilSchoolmychoice

நடுநிசி கே.எல் தொடரை இயக்கிய உங்களின் உத்வேகத்தைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்க.

அரேபிய நாட்டுப்புறக் கதைகள், “ஒன் தௌசன் ஒன் நைட்ஸ்” (One Thousand One Nights) எனக்கு உத்வேகம் அளித்தது. ‘நடுநிசி’ என்றால் தமிழில் நள்ளிரவு என்று பொருள்படும். தலைப்பின்படி, நாட்டின் தலைநகரானக் கோலாலம்பூரில் (கேல்) நள்ளிரவு வேளைக்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகளை இந்தத் தொடர் ஆராய்கிறது. கதையை உருவாக்கும்போது  பிரபலமான நடிகர்களைக் கொண்ட 13 வெவ்வேறுக் கதைகளுடன் ஒரு தொகுப்பை இயக்க முடிவுச் செய்தேன்.

நடுநிசி கேஎல் மூலம் இரசிகர்களை என்ன எதிர்பார்க்கலாம்?

காதல், த்ரில்லர், திகில், அதிரடி, நாடகம் மற்றும் பல வகைகளில் பிரபலமானத் திறமையாளர்கள் நடித்தத் தொடரை இரசிகர்கள் கண்டு மகிழலாம். ஒவ்வொரு அத்தியாயமும் சினிமாக் காட்சிப் படைப்பு மற்றும் தயாரிப்பு வடிவமைப்புடன் சோதனை ரீதியாக உருவாக்கப்பட்டது. முந்தைய அத்தியாயங்களைப் பார்க்காமல் இரசிகர்கள் பிற அத்தியாயங்களைத் தனித்தனியாகக் கண்டுக் களிக்கலாம்.

3. நடுநிசி கே.எல் இயக்கிய உங்களின் குறிப்பிடத்தக்க நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்க.

கோவிட்-19 எஸ்ஓபிகளின் அமலாக்கத்தினால் நள்ளிரவுக்குப் பிறகு படப்பிடிப்பு நடத்துவது சற்றுச் சவாலாக இருந்தது. இதனால், தற்போதையச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கதை மற்றும் கருத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் துல்லியமானத் திட்டமிடல் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டன. சிறந்த குழு மற்றும் திறமையான நடிகர்களைக் கொண்டு அனைத்துக் கலைஞர்களின் சிறந்தப் படைப்பை வெளிக்கொணர்ந்தோம். இந்தத் திட்டம் முழுவதிலும் எனது நோக்கத்தை அனைவரும் நம்பியதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தத் தொடருக்கான உங்களின் நம்பிக்கைகள் யாவை?

இந்தத் தொடர் இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றால், பிற சீசன்களில் பினாங்கு, சிங்கப்பூர் உள்ளிட்டப் பல நகரங்களையும் ஆராய விரும்புகிறோம்.