Home கலை உலகம் ‘பாபாஸ் & யு எங்கள் இன்ஸ்டா செஃப்’ சமையல் போட்டியில் 10 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப்...

‘பாபாஸ் & யு எங்கள் இன்ஸ்டா செஃப்’ சமையல் போட்டியில் 10 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசுகள்

595
0
SHARE
Ad

‘பாபாஸ் & யு எங்கள் இன்ஸ்டா செஃப்’ சமையல் போட்டியில் 10,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வெல்லுங்கள்

‘பாபாஸ் & யு எங்கள் இன்ஸ்டா செஃப்’ போட்டியைப் பற்றிய விபரங்கள்:

• அனைத்து மலேசியர்களும் 10,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்லும் அரிய வாய்ப்பைப் பெற, இப்போதிலிருந்து ஜனவரி 2023 வரை நடைபெறும், ‘பாபாஸ் & யு எங்கள் இன்ஸ்டா செஃப்’ எனும் சமையல் போட்டியில் பங்கேற்கலாம்.

• பங்கேற்க்க விரும்பும் போட்டியாளர்கள் பின்வருபவற்றைச் செய்ய வேண்டும்:

#TamilSchoolmychoice

o பாபாவின் தயாரிப்புப் பொருட்களைப் பயன்படுத்தி 5 நிமிட அசல் சமையல் காணொலியைப் போட்டியாளர்கள் உருவாக்க வேண்டும்.

o #BabasInstaChef என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திக் காணொலியைத் தங்களின் தனிப்பட்ட இன்ஸ்டாகிராம், முகநூல் அல்லது யூடியூப் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

o பங்கேற்பாளர்கள் தங்கள் சமூக ஊடகக் கணக்குப் ‘பொது’ என அமைக்கப்பட்டுள்ளதை உறுதிச்செய்ய வேண்டும்.

o மேலும், astroulagam.com.my/BabasInstaChef என்ற அகப்பக்கத்தின் வாயிலாகப் பங்கேற்பாளர்கள் போட்டிக்கான நுழைவுப் படிவத்தைப் பூர்த்திச் செய்ய வேண்டும்.

• ஒவ்வொரு மாதமும் இரண்டு வெற்றியாளர்கள் தேர்வுச் செய்யப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் தலா 1,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் போட்டியாளர்களும் இறுதிச் சுற்றில் பங்கேற்க அழைக்கப்படுவர். வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வெற்றியாளர் 10,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்லும் வாய்ப்பைப் பெறுவர்.

• மேல் விபரங்களுக்கு, ஆஸ்ட்ரோ உலகத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.