Home நாடு மக்கள் கூட்டணி ஆட்சியை பிடித்தால் மே 6ஆம் தேதி பொது விடுமுறை

மக்கள் கூட்டணி ஆட்சியை பிடித்தால் மே 6ஆம் தேதி பொது விடுமுறை

743
0
SHARE
Ad

general-election-malaysia-20131-300x201கோலாலம்பூர், ஏப்ரல் 24- வரும் 13ஆவது பொதுத்தேர்தல் மே 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்பொதுத் தேர்தலில் மக்கள் கூட்டணி புத்ரா ஜெயாவை கைப்பற்றினால்

பொதுத் தேர்தலுக்கு மறுநாள் (6.5.2013) திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று பாஸ் கட்சியின் உதவித்தலைவர் டத்தோ மாஃவுஸ் ஒமார் கூறினார்.

மத்திய அரசாங்கத்தை அமைக்கும் வகையில் மக்கள் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றால் மே 6ஆம் தேதி நிச்சயம் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

#TamilSchoolmychoice

மேலும் வாக்காளார்கள் வாக்களித்தபின் அவசர அவசரமாக வீடு திரும்ப வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார். இப்பொதுத்தேர்தலில் 1 கோடியே 33 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.