ஏப்ரல் 24 – உலகின் எங்கோ ஒரு மூலையில் மங்கோலியா நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வர்த்தக தொடர்புகளுக்காக வந்த ஒரு பெண்மணி, அல்தான்துன்யா.
தனது வர்த்தக தொடர்புகளும், சந்திப்புகளும் மிக இளம் வயதிலேயே தன்னை மரணப் பாதைக்கு அழைத்ததுச் செல்லும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார் அல்தான்துன்யா.
ஆனால் அதைவிட முக்கியமாக தான் இறந்த பின்னும், தன்னுடைய மரணமும், தன்னுடைய பெயரும், பின்னணிகளும் அடுத்துவரும் ஆண்டுகளில் மலேசிய அரசியலையே ஆட்டுவிக்கும் என்று அவர் தனது மரணத் தறுவாயில் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது.
ஆனால் அவரது நினைவுகளும், பெயரும் இன்னும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் இப்போது நடைபெறும் 13வது பொதுத் தேர்தலிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றது என்பதை சொல்லாமல் சொல்கின்றது, இதோ நீங்கள் மேலே காணும் பதாகை.
மே 5ஆம் தேதி மலேசியாவில் பொதுத் தேர்தல். இந்த பொதுத் தேர்தலின் பிரச்சாரங்களில் முக்கிய அங்கம் வகிக்கும் அல்தான்துன்யாவின் பிறந்த நாள் மே 6ஆம் தேதி என்ற தகவலும் இணையத் தளங்களில் உலா வருகின்றது.
அந்த மே 6ஆம் தேதிதான் மலேசியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதும் மலேசியர்களால் முடிவு செய்யப்படும்.
இருந்தபோது யார் என்றே யாருக்கும் தெரியாத ஒரு பெண்மணி இறந்த பின்னும் மலேசிய அரசியலை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கின்றார் பாருங்கள்!