(ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் ஒளியேறி வரும் தொடர் ‘உப்பு ரொட்டி சிதம்பரம்’. பரவலாக இரசிகர்களிடையே வரவேற்பையும் பெற்றது. இந்தத் தொடரைப் பார்க்காமல் தவறவிட்டவர்கள் அதை ஆஸ்ட்ரோ ஒன் டிமாண்ட் தளத்தில் பார்க்கலாம். அந்தத் தொடரில் பங்காற்றிய கலைஞர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்)
ஷாலினி பாலசுந்தரம், இயக்குநர்:
- உப்புரொட்டி சிதம்பரம் தொடரை இயக்குவதற்கான உங்களின் உத்வேகம் என்ன?
சிறுவயது முதல் இன்றுவரையிலான எனது சில நினைவுகள் உட்பட என்னைச் சுற்றியுள்ளப் பல்வேறு அம்சங்கள் இந்தத் தொடரை இயக்கத் தூண்டின. இந்தத் தொடர் குடும்பத்துடன் வலுவாகத் தொடர்புடையது.

மேலும், இது மலேசியக் கலாச்சாரத்தை எதிரொலிக்கிறது என்றும் நான் நம்புகிறேன். வெளிநாட்டு நாடகத் தொடர்கள் மீதான இரசிகர்களின் ஈர்ப்பைக் கண்டு நான் வியந்துள்ளேன். மேலும், அதன் பின்னணியிலுள்ள உளவியலைப் புரிந்துக் கொள்ளவும் முயற்சித்தேன். எனவே, அந்த உளவியலை நமது உள்ளூர் தொடரில் பயன்படுத்த முயற்சித்தேன்.
- உப்புரொட்டி சிதம்பரம் தொடரை இயக்கிய உங்களின் குறிப்பிடத்தக்க நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ளவும்.
தொடரின் படப்பிடிப்பின் போது ஒரு இயக்குநராக, நான் வியப்படைந்தேன். பெரும்பாலானக் கலைஞர்கள் அவரவருடையக் கதாப்பாத்திரமாகப் பரிணமித்து, படப்பிடிப்பின் போது என்னை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
க. குணசேகரன் & நதியா ஜெயபாலன், நடிகர்கள்:
- உப்புரொட்டி சிதம்பரம் தொடரில் நீங்கள் வகித்தக் கதாப்பாத்திரத்தைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்ளவும்.
க. குணசேகரன்: ஒரு கூட்டுக் குடும்பத்தின் தலைவர் சிதம்பரம் என் கதாப்பாத்திரம். மனைவியும், மருமகனும் ஏற்படுத்தும் இறுக்கமானச் சூழலுக்கு மத்தியில் பாசம், கோபம், கண்டிப்புடன், மனைவியின் தன்மைக்குத் தணிந்துப் போனாலும் குடும்பத்தின் தலைவன் எனும் தன்னுடைய இடத்தில் இருந்து எள்ளளவும் இறங்கி வராமல் தன் மளிகைக்கடையையும் குடும்பத்தையும் வெற்றிகரமாக நடத்தி வரும் தந்தை.
நதியா: திருமணமாகி 2 குழந்தைகளுடையப் பெண்ணாக நடித்துள்ளேன். எனதுக் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் அதேச் சமயம் சவால்களை நான் எவ்வாறுக் கையாள்கிறேன் என்பதை எனதுக் கதாப்பாத்திரம் சித்தறிக்கிறது.
- உப்புரொட்டி சிதம்பரம் தொடரில் நடித்த உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்ளவும்.
க. குணசேகரன்: வெளியூரில் ஒரே வீட்டில் தொடர்ச்சியாக 20 நாட்கள் ஒரு குடும்பமாகவேத் தங்கியிருந்துப் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டது எனக்குப் புது அனுபவம். 35 அத்தியாயத் தொடரில் அதுவும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்ததும் நல்ல ஓர் அனுபவம்.
நதியா: முதல் சில ஒத்திகைகளின் போது நான் பதட்டமாகவும் கவலையாகவும் இருந்தேன். பொறுமையாக இருந்த இயக்குநருக்கும், பெரும் ஆதரவை வழங்கிய அனுபவமிக்க நடிகர்களுக்கும் நன்றி. இது ஓர் அற்புதமான அனுபவம் என்றுதான் கூறுவேன்.