Home நாடு மகாதீர் தலைமையில் புதிய கூட்டணி : கெராக்கான் தானா ஆயர்

மகாதீர் தலைமையில் புதிய கூட்டணி : கெராக்கான் தானா ஆயர்

501
0
SHARE
Ad

புத்ராஜெயா: வரவிருக்கும் 15-வது தேர்தலில் அம்னோவை எதிர்கொள்வதற்காக கெராக்கான் தானா ஆயர் என்ற மலாய்-முஸ்லிம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்தார்.

மலாய்க்காரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவே இது அமைக்கப்பட்டது என பார்ட்டி பெஜுவாங் தானா ஆயர் கட்சியின் தலைவருமான மகாதீர் தெரிவித்தார்.

எனினும் இந்த இயக்கத்துடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்றும் அரசியல் இயக்கம் என்பது அனைத்து மலேசிய இனங்களையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் – மாறாக,  மலாய்-முஸ்லிம் இனங்களை மட்டும் கொண்டிருக்கக் கூடாது – என எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த இயக்கத்தில் நான்கு அரசியல் கட்சிகள், அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்), கல்வியாளர்கள் மற்றும் தனிநபர்கள் இணைந்துள்ளனர்.

தேசிய இந்திய முஸ்லீம் கூட்டணி கட்சி (இமான்), பார்ட்டி பூமிபுத்ரா பெர்காசா மலேசியா (புத்ரா) மற்றும் பார்ட்டி பாரிசான் ஜெமா இஸ்லாமியா சே-மலேசியா (பெர்ஜாசா) ஆகியவை அடங்கும்.

“பல மலாய்க்காரர்கள் அம்னோவின் ஆட்சியில் பிரச்சனையில் உள்ளனர். வறுமையில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் மலாய்க்காரர்கள்” என்று டாக்டர் மகாதீர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 4) செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“ஏழைகள் மிகவும் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மிகவும் செல்வந்தர்களாகவும் இருந்தால், அது நாடு தழுவிய நிலைத்தன்மையற்ற சூழலை ஏற்படுத்தும். அதனால்தான் நாங்கள் ஒரு மலாய்-முஸ்லிம் இயக்கத்தை உருவாக்கினோம், மலாய்க்காரர்கள் பல இனங்கள் வாழும் நாட்டில் நியாயமான பங்கைப் பெறுவதை உறுதி செய்வோம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 120 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் தானா ஆயர் இலக்கு கொண்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.