Home இந்தியா இந்தியாவின் புதிய துணை அதிபர் – பாஜக கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தாங்கர்

இந்தியாவின் புதிய துணை அதிபர் – பாஜக கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தாங்கர்

620
0
SHARE
Ad

புதுடில்லி : இந்திய அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று இந்தியாவின் அடுத்த துணை அதிபராக மேற்கு வங்காளத்தின் முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தாங்கர் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் ஆளும் பாஜகவின் கூட்டணி வேட்பாளராக முன்னிருத்தப்பட்டார்.

ஒரு சாதாரண விவசாயின் மகனான ஜக்தீப் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவைத் தோற்கடித்தார்.

#TamilSchoolmychoice

மொத்தம் செலுத்தப்பட்ட 725 வாக்குகளில் 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. ஜக்தீப் 528 வாக்குகள் பெற்றார். மார்கரெட் 182 வாக்குகள் மட்டுமே பெற்றார்.