சிறந்த 5 இறுதிச் சுற்றுப் போட்டியாளர்களை ‘ராப் போர்க்களம்’ சீசன் 2 அறிவித்தது
கோலாலம்பூர் – ஆர்வமுள்ள பத்து ராப்பர்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதிப்பெறத் தீவிரமாகப் போட்டியிட்டப் பிறகு, உள்ளூர் தமிழ் ராப் போட்டியான ராப் போர்க்களம் சீசன் 2-இன் சிறந்த 5 இறுதிச் சுற்றுப் போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
ஓஜி பேங்கர்ஸ், ஷெரன் ஜி, டர்சிவா, வேதன் மற்றும் டேவ் எவட் ஆகிய 5 இறுதிச் சுற்றுப் போட்டியாளர்களில் தங்களுக்கு விருப்பமானவரை இரசிகர்கள் உற்சாகப்படுத்தலாம்.

உள்ளூர் தமிழ் ராப் ஜாம்பவான் மற்றும் ராப் போர்க்களம் சீசன் 2-இன் நடுவரான யோகி பி; பிரபல உள்ளூர் ராப்பர் மற்றும் தொகுப்பாளரான எம்சி ஜெஸ்; பிரபலச் சிறப்பு நடுவரான ரோஷன் ஜாம்ராக்; மற்றும் உள்ளூர் திறமையாளரான ஓர்கா ஆகியோரின் பிரம்மாண்டப் படைப்புகளையும் இரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

முதல் நிலை வெற்றியாளர் 20,000 ரிங்கிட் ரொக்கப் பரிசையும், இரண்டாம் நிலை வெற்றியாளர் 10,000 ரிங்கிட் ரொக்கப் பரிசையும், மூன்றாம் மற்றும் நான்காம் நிலை வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் தலா 2,000 ரிங்கிட் ரொக்கப் பரிசையும், மற்றும் ஐந்தாம் நிலை வெற்றியாளர் 1,000 ரிங்கிட் ரொக்கப் பரிசையும் தட்டிச் செல்வர்.

ஆகஸ்டு 26, இரவு 9 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணும் ராப் போர்க்களம் சீசன் 2-இன் இறுதிச் சுற்றை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) மற்றும் ஆஸ்ட்ரோ கோ ஆகியவற்றில் கண்டுக் களியுங்கள் அல்லது எப்போது வேண்டுமானாலும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.
ராப் போர்க்களம் சீசன் 2-ஐப் பற்றிய மேல் விபரங்களுக்கு astroulagam.com.my/RapPorkalamS2 எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

