Home கலை உலகம் ‘ராப் போர்க்களம்’ சீசன் 2-இன் முதல் நிலை வெற்றியாளருக்கு 20,000 ரிங்கிட் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது

‘ராப் போர்க்களம்’ சீசன் 2-இன் முதல் நிலை வெற்றியாளருக்கு 20,000 ரிங்கிட் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது

527
0
SHARE
Ad

  • ‘ராப் போர்க்களம்’ சீசன் 2-இன் முதல் நிலை வெற்றியாளருக்கு 20,000 ரிங்கிட் ரொக்கப் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
  • ராப் போர்க்களம் சீசன் 2-இன் முதல் நிலை வெற்றியாளராக ஓஜி பேங்கர்ஸ் முடிசூட்டப்பட்டார்

கோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 26) நேற்று நடைப்பெற்ற இறுதிச் சுற்றில் ஐந்து இறுதிப் போட்டியாளர்களுக்கிடையேயானக் கடுமையானப் போட்டியைத் தொடர்ந்து, ஓஜி பேங்கர்ஸ் ராப் போர்க்களம் சீசன் 2-இன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

20,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் சென்றார். ஷெரன் ஜி, டர்சிவா, வேதன் மற்றும் டேவ் எவட் ஆகியோர் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடித்தனர். ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக தொலைக்காட்சியிலும் ஆஸ்ட்ரோ கோவிலும் இறுதிச் சுற்று ஒளிபரப்பப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “ராப் போர்க்களம் வழியாக உள்ளூர் தமிழ் ராப் துறையில் சிறந்த ராப் ஜாம்பவான்களால் வழிநடத்தப்பட்ட இந்த உள்ளூர் திறமையாளர்களின் வளர்ச்சியைக் காண்பது ஒரு வெகுமதியானப் பயணமாகும்.

மலேசியர்களுக்கு அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த இது போன்றப் பல தளங்களை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக ஓஜி பேங்கர்ஸ் உட்பட அனைத்து இறுதிப் போட்டியாளர்களுக்கும், அவர்களின் தகுதியான வெற்றிக்காக நாங்கள் வாழ்த்துகிறோம்” என்றார்.

ராப் போர்க்களம் சீசன் 2-இன் முதல் நிலை வெற்றியாளர், ஓஜி பேங்கர்ஸ் கூறுகையில், “எனது 13 வருடத் தொடர்ச்சியானக் கடின உழைப்புக்கு இறுதியில் பலன் கிடைத்தது போல் உணர்கிறேன். எனது ஐடல்களான யோகி பி, எம்சி ஜெஸ், செயிண்ட் டிஎஃப்சி மற்றும் ஷீசே ஆகியோர் முன்னிலையில் ராப் போர்க்களம் சீசன் 2-இன் முதல் நிலை வெற்றியாளராக வாகைச் சூடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ஷெரன் ஜி

இந்தத் தருணத்தை எனது வாழ்நாள் சாதனையாகப் போற்றுவேன். இது எனது முதல் மேடை நிகழ்ச்சியாக இருந்தாலும், வெற்றிப் பெற்று, உழைப்பு எப்போதும் பலனளிக்கும் என்பதை இரசிகர்களுக்கு நிரூபித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வேளையில் எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். இனிவரும் காலங்களில் அவர்களின் தொடர் ஆதரவை எதிர்ப்பார்க்கிறேன்”

இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு 10,000 ரிங்கிட் ரொக்கப் பரிசும், மூன்றாம் மற்றும் நான்காம் நிலை வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் தலா 2,000 ரிங்கிட் ரொக்கப் பரிசும், மற்றும் ஐந்தாம் நிலை வெற்றியாளருக்கு 1,000 ரிங்கிட் ரொக்கப் பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. ராப் போர்க்களம் சீசன் 2-இன் அனைத்து அத்தியாயங்களையும் இரசிகர்கள் இப்போது ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாகப் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம்.

மேல் விபரங்களுக்கு astroulagam.com.my/RapPorkalamS2 எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.