Home நாடு மூடா – பக்காத்தான் இடையில் தேர்தல் உடன்பாடு

மூடா – பக்காத்தான் இடையில் தேர்தல் உடன்பாடு

467
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலில் பலரும் எதிர்பார்க்கப்பட்ட திருப்பமாக பக்காத்தான் கூட்டணி-மூடா கட்சி இடையில் தேர்தல் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற பக்காத்தான் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

15-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹாராப்பானுக்கான மிகப் பெரிய சாதகமாக மூடா கட்சியுடனான தேர்தல் உடன்பாடு பார்க்கப்படுகிறது.

எனினும் மூடா கட்சி இன்னும் பக்காத்தான் கூட்டணியில் அதிகாரபூர்வமாக இணையவில்லை. தேர்தல் உடன்பாட்டுக்கு மட்டும் இணக்கம் காணப்பட்டுள்ளது.