Home நாடு பகாங் மந்திரி பெசார் அட்னான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்

பகாங் மந்திரி பெசார் அட்னான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்

421
0
SHARE
Ad
அட்னான் யாக்கோப்

குவாந்தான் : பகாங் மாநிலத்தின் மந்திரி பெசாராக நீண்ட காலம் பதவி வகித்த அட்னான் யாக்கோப் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தை கடந்த 2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கைப்பற்றியது. பல மாநிலங்களில் தோல்வியடைந்தாலும், மத்திய அரசாங்கத்தை அமைப்பதில் தோல்வியடைந்தாலும், பகாங் மாநிலத்தில் மட்டும் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

2018 வரை அட்னான் பகாங் மந்திரி பெசாராகப் பதவி வகித்தார். பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மந்திரி பெசாராக விலகிய அட்னானுக்குப் பதிலாக வான் ரோஸ்டி பகாங் மந்திரி பெசாராக பதவியேற்றார்.