Home Video டும் டும் டுமீல் – மலேசியத் தமிழ்த் திரைப்படம் முன்னோட்டம் வெளியீடு

டும் டும் டுமீல் – மலேசியத் தமிழ்த் திரைப்படம் முன்னோட்டம் வெளியீடு

1201
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவில் தமிழ்த் திரைப்படங்கள் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டு வெளியீடு கண்டு வெற்றியும் பெறுவது நமது உள்ளூர் கலையுலகத்தின் முக்கிய வளர்ச்சி கட்டமாகப் பார்க்கப்படுகிறது.

அந்த வரிசையில் எதிர்வரும் நவம்பர் 3-ஆம் தேதி முதற்கொண்டு மலேசியாவெங்கும் 40-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது ‘டும் டும் டுமீல்’ என்ற வித்தியாசப் பெயர் தமிழ்த் திரைப்படம்.

நம் நாட்டின் பிரபல நடிகர்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தை தீபன் எம்.விக்னேஷ் இயக்கியுள்ளார். டி.சத்தியவர்மன் – விஜய் மோகன்ராவ் ஆகியோர் தயாரிப்பில் இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.சந்தோஷ் தயாநிதி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் சமூக ஊடகங்களிலும், யூடியூப் தளத்திலும் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) மாலை 7.00 மணிக்கு வெளியிடப்படவிருக்கிறது.

அந்த முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணைப்பில் பார்த்து மகிழலாம்: