Home உலகம் பிரிட்டன் : நிதி அமைச்சர் குவாசி குவார்தெங் நீக்கம் – ஜெரமி ஹண்ட் நியமனம்

பிரிட்டன் : நிதி அமைச்சர் குவாசி குவார்தெங் நீக்கம் – ஜெரமி ஹண்ட் நியமனம்

548
0
SHARE
Ad

இலண்டன் : பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள லிஸ் டிரஸ்ட் நடப்பு நிதி அமைச்சர் குவாசி குவார்தெங்கை அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய நிதியமைச்சராக ஜெரமி ஹண்ட் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ள ஏதுவாக இந்த மாற்றத்தை லிஸ் டிரஸ் செய்துள்ளார் என நம்பப்படுகிறது.

ஜெரமி ஹண்ட், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு லிஸ் டிரஸ்சுடன் போட்டியிட்டவர்களில் ஒருவராவார்.

#TamilSchoolmychoice

பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கும் பிரிட்டனில் பொருளாதார உருமாற்றங்களை நிதியமைச்சர் மாற்றம் மூலம் லிஸ் டிரஸ் முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.