Home நாடு பாஸ் கட்சிக்கு 47 நாடாளுமன்றத் தொகுதிகளை பெரிக்காத்தான் ஒதுக்கியதா?

பாஸ் கட்சிக்கு 47 நாடாளுமன்றத் தொகுதிகளை பெரிக்காத்தான் ஒதுக்கியதா?

485
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாஸ் கட்சிக்கு 47 நாடாளுமன்றத் தொகுதிகளை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஒதுக்கியுள்ளதாக அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுக்கி (படம் – Asyraf Wajdi Dusuki) தெரிவித்துள்ளார்.

அம்னோ தலைவர்களுக்கும் பாஸ் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் அஷ்ராஃப். பாஸ் கட்சிக்கு பெரிக்காத்தான் நேஷனல் 47 தொகுதிகளை ஒதுக்கியிருப்பதாகவும் அதே எண்ணிக்கையிலான தொகுதிகளை தேசிய முன்னணி ஒதுக்க  முன்வராததால்தான் பாஸ், அம்னோவுடன் இணையவில்லை என்றும் அஷ்ராப் குற்றம் சாட்டியுள்ளார்.