Home நாடு மொகிதின் யாசின் சந்திக்கும் இறுதிப் பொதுத் தேர்தல் – பாகோவில் வெல்வாரா?

மொகிதின் யாசின் சந்திக்கும் இறுதிப் பொதுத் தேர்தல் – பாகோவில் வெல்வாரா?

581
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தான் சந்திக்கவிருக்கும் இறுதிப் பொதுத் தேர்தல் இதுவென அறிவித்துள்ளார். பெர்சாத்து கட்சியின் தலைவராகவும் அவர் செயல்படுகிறார்.

மீண்டும் இந்த முறை அவர் பாகோ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு எதிராக வியூகம் அமைத்திருக்கும் அம்னோ – இந்த முறை பாகோவில் அவரை வீழ்த்தக் கடுமையாகப் போராடும் எனக் கருதப்படுகிறது.

பாகோ தவிர்த்து பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி வாகை சூடக் கூடிய தொகுதிகள் எதுவென்ற ஆர்வமும் அரசியல் ஆய்வாளர்களிடையே எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

பெரிக்காத்தானில் இணைந்திருக்கும் பாஸ் கட்சி தன் பாரம்பரியத் தொகுதிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் அம்னோ, பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஆகியவற்றுக்கு எதிராகவும் பாஸ் கடுமையான சவால்களை சந்திக்கக் கூடும்.

பெர்சாத்து கட்சி ஷெராட்டன் நகர்வு ஆட்சிக் கவிழ்ப்பு காரணமாக இந்த முறை வாக்காளர்களால் புறக்கணிக்கப்பட்டு மோசமான தோல்விகளைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், மொகிதின் யாசின் பாகோவில் மீண்டும் வெல்ல முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.