Home நாடு தெங்கு ரசாலி ஹம்சா மீண்டும் குவா மூசாங்கில் போட்டியிடலாம்

தெங்கு ரசாலி ஹம்சா மீண்டும் குவா மூசாங்கில் போட்டியிடலாம்

427
0
SHARE
Ad

குவா மூசாங் : நம் நாட்டின் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ச்சியாக இயங்கி வந்திருப்பவர் தெங்கு ரசாலி ஹம்சா. குவா மூசாங் தொகுதியின் அம்னோ தலைவர்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற குவா மூசாங் அம்னோ தொகுதிக் கூட்டத்தில் மீண்டும் தெங்கு ரசாலி ஹம்சாவே போட்டியிட அந்தத் தொகுதியின் பேராளர்கள் முன்மொழிந்துள்ளனர்.

எனினும் தன்னைத் தேர்வு செய்வதா இல்லையா என்ற முடிவை அம்னோவின் தலைமைத்துவமே எடுக்கட்டும் என தெங்கு ரசாலி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எந்த பொதுத் தேர்தலிலும் தோல்வியடையாமல் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்திருப்பவர் தெங்கு ரசாலி. 1990, 1995-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் செமாங்காட் 46 கட்சி சார்பாக அவர் குவா மூசாங்கில் போட்டியிட்ட போதும் அவர் வெற்றி பெற்றார். பின்னர் மீண்டும் அம்னோவில் சேர்ந்த அவர் 1999 பொதுத் தேர்தல் தொடங்கி மீண்டும் குவா மூசாங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்திருக்கிறார்.