Home நாடு அன்வார் இப்ராகிமை எதிர்த்து தம்பூன் அம்னோ தலைவர் போட்டி

அன்வார் இப்ராகிமை எதிர்த்து தம்பூன் அம்னோ தலைவர் போட்டி

465
0
SHARE
Ad

ஈப்போ : 15-வது பொதுத் தேர்தலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் தொகுதி தம்பூன். அன்வார் இப்ராகிம் இங்கு போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

அவரை எதிர்த்துக் களம் காணத் தயார் என நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவருமான அமாட் பைசால் அசுமு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இந்தத் தொகுதியில் அன்வாரை எதிர்க்கப் போகும் தேசிய முன்னணி வேட்பாளர் அம்னோ தலைவர் அமினுடின் முகமட் ஹானாபியா எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

பேராக் அம்னோவும் அமினுடினைப் பரிந்துரைத்ததாக அம்னோ தேசியத் தலைவர் சாஹிட் ஹாமிடி குறிப்பிட்டிருக்கிறார்.

2018-இல் தேசிய முன்னணி, பாஸ் கட்சிகளை எதிர்த்து இந்தத் தொகுதியில் பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் போட்டியிட்ட அமாட் பைசால் அசுமு 5,320 வாக்குகள் பெரும்பான்மையில் தம்பூனில் வெற்றி பெற்றார்.