Home நாடு தேசிய முன்னணி வெற்றி பெற்றால் 3 துணைப் பிரதமர்கள்…

தேசிய முன்னணி வெற்றி பெற்றால் 3 துணைப் பிரதமர்கள்…

603
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், 3 துணைப் பிரதமர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர்களில் ஒருவர் சபாவில் இருந்தும், இன்னொருவர் சரவாக்கில் இருந்தும் மூன்றாமவர் தீபகற்ப மலேசியாவில் இருந்தும் நியமிக்கப்படுவர் என அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

பிரதமராகத் தேர்வானால் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியும் இதனை ஏற்றுக் கொள்வார் என நம்புவதாகவும் சாஹிட் தெரிவித்தார்.

இந்த மாற்றம் தேசிய முன்னணி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் சாஹிட் தெரிவித்தார்.