Home நாடு கெராக்கான் 18 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரிக்காத்தான் சின்னத்தில் போட்டி

கெராக்கான் 18 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரிக்காத்தான் சின்னத்தில் போட்டி

464
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : கெராக்கான் 15-வது பொதுத் தேர்தலில் 18 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்துள்ளது. போட்டியிடும் எல்லாத் தொகுதிகளிலும் பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தில் போட்டியிட கெராக்கான் முடிவு செய்துள்ளது.

ஒரு காலத்தில் பினாங்கை ஆண்ட அதிகாரமும் – ஆதிக்கமும் – மிக்க கட்சியாக கெராக்கான் விளங்கியது. 2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியைத் தொடர்ந்து உடனடியாக அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறியது கெராக்கான். அந்தக் கட்சி செய்த மாபெரும் தவறாக அந்த நகர்வு பார்க்கப்படுகிறது. மஇகா, மசீச போன்று தொடர்ந்து தேசிய முன்னணியிலேயே இருந்திருந்தால் 2020 ஷெராட்டன் நகர்வைத் தொடர்ந்து கெராக்கான் மத்திய அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும். அமைச்சரவை உறுப்பினர்களையும் கெராக்கான் பெற்றிருக்கக் கூடும்.

கெராக்கான் அந்த வாய்ப்பை இழந்ததற்கு அவசரப்பட்டு தேசிய முன்னணியில் இருந்து விலக அது எடுத்த முடிவே காரணமாகும்.

#TamilSchoolmychoice

பெரிக்காத்தான் கூட்டணியில் எந்த அளவுக்கு கெராக்கான் பயன் பெறும், கெராக்கானால் எந்த அளவுக்கு பெரிக்காத்தான் பயன்பெறும் என்பது பொதுத் தேர்தல் முடிவுகள்தான் காட்டிக் கொடுக்கும்.