Home Video டும் டும் டுமீல் – முன்னோட்டம் மலேசியத் திரையரங்குகளில் வெளியீடு

டும் டும் டுமீல் – முன்னோட்டம் மலேசியத் திரையரங்குகளில் வெளியீடு

1190
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவில் தயாரிக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் 3-ஆம் தேதி மலேசியத் திரையரங்குகளில் திரையேறவிருக்கும் தமிழ்ப் படம் ‘டும் டும் டுமீல்’.

இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் சமூக ஊடகங்களிலும், யூடியூப் தளத்திலும் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

எதிர்வரும் நவம்பர் 3-ஆம் தேதி சபா, சரவாக் உள்ளிட்டு, மலேசியாவெங்கும் 40-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது ‘டும் டும் டுமீல்’.

#TamilSchoolmychoice

தீபாவளித் திரையீடுகளாக சர்தார், பிரின்ஸ் ஆகிய இரண்டு படங்கள் தற்போது மலேசியத் திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்கின்றன. இந்தப் படங்களுக்கு முன்னர் ‘டும் டும் டுமீல்’ படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்) திரையிடப்பட்டு இரசிகர்களின் ஆதரவையும், பாராட்டையும் பெற்று வருகிறது.

நம் நாட்டின் பிரபல நடிகர்கள் இர்பான் சைனி, கவிதா சின்னையா, குபேன் மகாதேவன், விக்ரன், ஜேம்ஸ் தேவன் ஆரோக்கியசாமி, ரிட்சுவான், யுவராஜ் கிருஷ்ணசாமி, விகடகவி மகேன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தை தீபன் எம்.விக்னேஷ் இயக்கியுள்ளார். டி.சத்தியவர்மன் – விஜய் மோகன்ராவ் ஆகியோர் தயாரிப்பில் ரிதம் ஹைட்ஸ் நிறுவனம் சார்பில் இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.சந்தோஷ் தயாநிதி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் சமூக ஊடகங்களிலும், யூடியூப் தளத்திலும் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) வெளியிடப்பட்டது.

அந்த முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணைப்பில் பார்த்து மகிழலாம்: