இலண்டன்: பிரிட்டனின் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் ரிஷி சுனாக் தன் அமைச்சரவையைக் கட்டமைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்.
முதல் கட்டமாக துணைப் பிரதமராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டிருக்கிறார். டொமினிக் ராப் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்தவர். பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றதைத் தொடர்ந்து மீண்டும் துணை பிரதமராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதற்கிடையில் முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸின் அமைச்சரவையில் இருந்தவர்களை பதவி விலகுமாறு பிரதமர் ரிஷி சுனக் கேட்டுள்ளார்.
ரிஷி சுனாக் பிரிட்டன் அரசர் 3-ஆம் சார்ல்சைச் சந்தித்து பிரிட்டனின் அடுத்தப் பிரதமராக ஆட்சி அமைக்கும் உரிமையையும் கோரியிருக்கிறார்.