Home கலை உலகம் ஓவியர் சந்துருவின் ஓவியக் கண்காட்சி : ‘சுய தோற்றத்தில் பெண்கள்’

ஓவியர் சந்துருவின் ஓவியக் கண்காட்சி : ‘சுய தோற்றத்தில் பெண்கள்’

840
0
SHARE
Ad

ஓவியர் சந்துரு…

இந்தப் பெயர் மலேசிய தமிழர்களுக்கும், தமிழ்ப் பத்திரிக்கையின் இலக்கிய பகுதி வாசகர்களுக்கும் புதிய அறிமுகம் அல்ல. அவர் வரையும் நவீன ஓவியங்கள், பெண்களுக்கு வரையும் மூன்று கண்கள் அனைத்தும் பேசு பொருளாகவும் விவாதப் பொருளாகவும் இருந்திருக்கிறது.

அவருடைய முதல் ஓவியக் கண்காட்சி 2009-ஆம் ஆண்டு “பதிவுகள்” என்ற தலைப்பிலும், இரண்டாவது கண்காட்சி ‘தோட்டமும் வாழ்வும்’ என்ற தலைப்பிலும் தலைநகரில் நடந்தது. அதன் பிறகு கூட்டு முறையில் 10-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளில் தனது ஓவியத்தை அவர் மக்களின் பார்வைக்கு வைத்திருக்கிறார்.

தற்போது women in profile அதாவது சுய தோற்றத்தில் பெண்கள் என்ற தலைப்பில் ஓவியர் சந்துரு தனது ஓவியக் கண்காட்சியை தலைநகரில் நாளை நடத்தவிருக்கிறார்.

#TamilSchoolmychoice

art voice ஓவிய மையத்தில் நடக்கவிருக்கும் இந்த ஓவியக் கண்காட்சியில் சமூக தொழில்முனைவரும், பெண்களுக்கான வழக்கறிஞரும் மற்றும் Moms Village Venture அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியுமான திருவாட்டி வத்சலா நாயர் மனோகரன் அவர்கள் வருகையளிக்க இருக்கிறார்கள்.

மேற்விவரங்கள் :

மலேசியர்களிடத்தில் ஓவியராகவும் கவிஞராகவும் நன்கு அறியப்படும் ஓவியர் சந்துருவின் இவ்வாண்டுக்கான சிறப்புக் கண்காட்சி. பெண்களை பெருமைப் படுத்தும் வகையில், பெண்களை முதன்மைப்படுத்தி வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள், நண்பர்கள் இந்தக் கண்காட்சியில் கலந்து சிறப்பிக்கும்படி அழைக்கிறோம்.

தலைப்பு: “Women in profile” ஓவியக் கண்காட்சி.

தேதி: 13 நவம்பர் 2022 ஞாயிறு
நேரம் : இரவு 8 மணிக்கு
இடம் : Art Voice Gallery 28, Jalan Kovil Hilir, Sentul. (மங்களதீபம் பின்புறம்)

சுமார் இரண்டு வாரங்களுக்கு இந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு கூகை  +6011-3980 3805