பெய்ஜிங், ஏப்ரல் 24- சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஷாங்டாங் மாகாணத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்டவர்களிடம் டாக்டர்கள் ரத்த பரிசோதனை நடத்தினர். அதில் எச் 7 என் 9 என்ற வைரஸ் கிருமி மூலம் இக்காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவும் ஒரு வகை பறவை காய்ச்சல் என கண்டறிந்து அதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தும், பறவை காய்ச்சலுக்கு இது வரை 22 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பறவை காய்ச்சல் தற்போது பிற இடங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கோழி இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பண்ணைகளில் உள்ள கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.