பாகான் டத்தோவில் அன்வாரின் உரையைக் கேட்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். அந்தத் தொகுதியில் இருக்கும் 2 சட்டமன்றத் தொகுதிகளான ருங்குப், ஹூத்தான் மெலிந்தாங் ஆகியவற்றையும் வெல்ல வேண்டும் என அன்வார் அறைகூவல் விடுத்தார்.
பிகேஆர் கட்சி சார்பில் மலாக்கா, ஹாங் துவா நாடாளுமன்றத் தொகுதியில் 2018-இல் போட்டியிட்டு வென்ற டத்தோ ஷாம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின் சாஹிட்டை எதிர்த்து பாகான் டத்தோவில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அன்வார் பிரச்சாரம் செய்தார்.
பாகான் டத்தோவில் வெற்றி பெற்று வரலாறு படைப்போம் என்றும் அன்வார் முழங்கினார்.
பாகான் டத்தோவில் 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது. பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த முகமட் ஃபைஸ் நைமான் போட்டியிடுகிறார். சுயேச்சையாக முன்னாள் துணைப் பிரதமர் துன் டாக்டர் இஸ்மாயிலின் மகனான தௌஃபிக் இப்ராகிம் போட்டியிடுகிறார். ஊழலுக்கு எதிராகப் போராடும் நோக்கில் தான் இங்கு போட்டிடுவதாக தௌஃபிக் கூறியிருக்கிறார்.