Home நாடு பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி அதிக தொகுதிகளுடன் முன்னணி – ஆட்சி அமைக்க முடியுமா?

பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி அதிக தொகுதிகளுடன் முன்னணி – ஆட்சி அமைக்க முடியுமா?

925
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இதுவரையில் வெளிவந்த அதிகாரத்துவ முடிவுகளின்படி பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி மிக அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னணி வகிக்கிறது. நள்ளிரவு 12 மணிவரையில் மலேசியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரத்துவத் தகவல்களின் படி பக்காத்தான் ஹாரப்பான் 25 தொகுதிகளுடன் முதல் இடத்திலும் அதைத் தொடர்ந்து இரண்டாவது நிலையில் சரவாக்கின் ஜிபிஎஸ் கூட்டணி 20 தொகுதிகளையும் வென்றுள்ளது.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மூன்றாவது இடத்தில் 16 தொகுதிகளையும் பெற்றிருக்கிறது.

பாஸ் கட்சி 14 தொகுதிகளை வென்றுள்ளது. பெரிக்காத்தான் கூட்டணியில் இருந்தாலும் பல தொகுதிகளில் பாஸ் தன் சொந்த சின்னத்தில் போட்டியிட்டது.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி 14 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சபாவின் ஜிஆர்எஸ் கூட்டணி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

ஜசெக 4 தொகுதிகளைப் பெற்றிருக்கிறது. பக்காத்தான் கூட்டணியில் இணைந்திருந்தாலும் ஜசெக சரவாக்கின் சில தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது.