Home நாடு தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார் மாமன்னர்

தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார் மாமன்னர்

389
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மாமன்னராகப் பதவியேற்ற நாள் முதல் வெப்பம் மிகுந்த நாட்டின் அரசியல் சூழலைத் தணிக்க வேண்டி – அத்தியாவசிய முடிவுகளை எடுக்க வேண்டிய நெருக்கடிகளுக்கு அடிக்கடி ஆளாகிறார் நமது மாமன்னர்.

15-வது பொதுத் தேர்தல் தெளிவான வெற்றிக் கூட்டணியை அடையாளம் காட்டத் தவறியிருப்பதைத் தொடர்ந்து மீண்டும் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் இக்கட்டான நிலைமை மாமன்னருக்கு மீண்டும் ஏற்பட்டிருக்கிறது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (நவம்பர் 22) தேசியக் கூட்டணித் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினையும், பக்காத்தான் ஹாரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமையும் சந்தித்து அடுத்த அரசாங்கம் ஒற்றுமை அரசாங்கமாக அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட சில ஆலோசனைகளை முன்வைத்திருக்கிறார் மாமன்னர்.

#TamilSchoolmychoice

ஆனால், மாமன்னரைச் சந்தித்து விட்டு வந்த முஹிடின் பக்காத்தான் – பெரிக்காத்தான் இணைந்த கூட்டணி ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு தர முடியாது எனக் கூறிவிட்டார்.

இதைத் தொடர்ந்து மாமன்னர் தேசிய முன்னணியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று காலை 10.30 மணிக்கு அரண்மனைக்கு வரும்படி உத்தரவிட்டிருக்கிறார். சில முக்கிய முடிவுகளை மாமன்னர் அந்தச் சந்திப்புகளைத் தொடர்ந்து எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.