Home நாடு தேசிய முன்னணி, ஜிபிஎஸ் கூட்டணி – ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெறும்; அன்வார் அறிவிப்பு

தேசிய முன்னணி, ஜிபிஎஸ் கூட்டணி – ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெறும்; அன்வார் அறிவிப்பு

625
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவின் 10-வது பிரதமராக இன்று பதவியேற்றுக் கொண்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று இரவு சுங்கை லோங் வளாகத்தில் உள்ள சுங்கை லோங் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.

அந்தச் சந்திப்பில் தேசிய முன்னணியும், சரவாக்கின் ஜிபிஎஸ் கூட்டணியும் தாம் அமைக்கவிருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெறவிருக்கின்றன என அன்வார் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து துணைப் பிரதமர் பதவி அம்னோவுக்கும், ஜிபிஎஸ் கூட்டணிக்கும் வழங்கப்படும் எனவும் அன்வார் கோடி காட்டினார்.