Home நாடு நாடாளுமன்றம் டிசம்பர் 19-ஆம் தேதி கூடும் – பெரும்பான்மையை நிரூபிப்போம்! அன்வார் இப்ராகிம்

நாடாளுமன்றம் டிசம்பர் 19-ஆம் தேதி கூடும் – பெரும்பான்மையை நிரூபிப்போம்! அன்வார் இப்ராகிம்

574
0
SHARE
Ad

கோலாலம்பூர் : புதிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்வரும் டிசம்பர் 19-ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் என அறிவித்தார்.

அந்தக் கூட்டத் தொடரில் முதல் நாளே அரசாங்கமே நம்பிக்கைத் தீர்மானத்தை முன்மொழியும் எனவும் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

இன்று இரவு சுங்கை லோங் வளாகத்தில் உள்ள சுங்கை லோங் கிளப்பில் அன்வார் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.

#TamilSchoolmychoice

அந்தச் சந்திப்பில் தேசிய முன்னணியும், சரவாக்கின் ஜிபிஎஸ் கூட்டணியும் தாம் அமைக்கவிருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெறவிருக்கின்றன என அன்வார் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து துணைப் பிரதமர் பதவி அம்னோவுக்கும், ஜிபிஎஸ் கூட்டணிக்கும் வழங்கப்படும் எனவும் அன்வார் கோடி காட்டினார்.