Home நாடு இந்தோனிசிய அதிபர் – சிங்கப்பூர் பிரதமர் – அன்வாருக்கு வாழ்த்து

இந்தோனிசிய அதிபர் – சிங்கப்பூர் பிரதமர் – அன்வாருக்கு வாழ்த்து

404
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவின் புதிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு உலகத் தலைவர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

அவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல் வெளிநாட்டுத் தலைவர் இந்தோனிசிய அதிபர் ஜோகோவி விடோடோ ஆவார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வியாழக்கிழமை இரவு சுங்கை லோங் வளாகத்தில் உள்ள சுங்கை லோங் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது கைப்பேசியில் இந்தோனிசிய அதிபர் ஜோகோவி விடோடோ அன்வாரை அழைத்தார்.

#TamilSchoolmychoice

அன்வார் விடோடோவுடன் உரையாடிய சிறிது நேரத்தில் அவருக்கு மற்றொரு கைப்பேசி அழைப்பு வந்தது. இந்த முறை அவரை அழைத்தவர் துருக்கியின் அதிபர் கார்டோகன் ஆவார்.

இவர்களைத் தொடர்ந்து பல உலகத் தலைவர்களும் அன்வாருக்குத் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.