Home Uncategorized அன்வாரின் புதிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை பதவியேற்குமா?

அன்வாரின் புதிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை பதவியேற்குமா?

375
0
SHARE
Ad
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டத்தில் மாமன்னருடன் அன்வார் இப்ராகிம்

புத்ரா ஜெயா : டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமராவாரா என்ற ஆர்வம் தற்போது தணிந்து விட்டது. அடுத்து அவரின் அமைச்சரவை எப்படியிருக்கும், அதில் யார் இடம் பெறுவார்கள் என்ற பரபரப்பு எழத் தொடங்கி விட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை அன்வார் மாமன்னரைச் சந்தித்ததைத் தொடர்ந்து அமைச்சரவை குறித்த ஆரூடங்களும் பரபரப்புகளும் அதிகரித்திருக்கின்றன.

நாளை வியாழக்கிழமை அமைச்சரவை குறித்த அறிவிப்பை பிரதமர் அன்வார் வெளியிடுவார் என்றும் அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (டிசம்பர் 2) புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.