Home கலை உலகம் ஆஸ்ட்ரோ: அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022 வெற்றியாளர் – விக்னேஸ்வரி சுப்ரமணியம் – சிறப்பு நேர்காணல்

ஆஸ்ட்ரோ: அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022 வெற்றியாளர் – விக்னேஸ்வரி சுப்ரமணியம் – சிறப்பு நேர்காணல்

305
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோ நடத்திய ‘அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022’ என்னும் போட்டியின் வெற்றியாளர் விக்னேஸ்வரி சுப்ரமணியம். அவருடன் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணல்

அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022 போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்ற பிறகு எப்படி உணர்கிறீர்கள்?

நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். எனது சகப் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் திறமையானவர்கள் என்பதால் இந்த வெற்றியை நான் எதிர்ப்பார்க்கவில்லை. இந்த வெற்றியை என்னால் நம்பவும்முடியவில்லை. இந்த வெற்றியின் மூலம் எனதுத் தோள்களில் அதிகப் பொறுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன். மேலும், இந்த வெற்றிக்கு நியாயம் வழங்க எனதுச் சிறந்தப் படைப்பை வழங்குவேன். இந்தப் பொன்னான வாய்ப்பிற்காக ஆஸ்ட்ரோ, ராகா, யு மொபைல் மற்றும் ஏஎஸ்சி அஜெண்டா சூரியா கம்யூனிகேஷன் நிறுவனங்களுக்கு நன்றிக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

கலைத்துறையில் நீங்கள் ஐடலாகக் கருதுபவர்கள் யார்?

#TamilSchoolmychoice

திறமையான உள்ளூர் தொகுப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட இக்கலைத்துறையில் உள்ள அனைவரையும் எனது முன்மாதிரியாகக் கருதுகிறேன். அறிமுகத் தொகுப்பாளராக ஒவ்வொருவரிடமிருந்தும் நான் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022 போட்டியில் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்துத் தொகுப்பாளர் சார்ந்த உங்களின் சில திட்டங்கள் யாவை?

நான் முன்பே குறிப்பிட்டது போல, இந்தத் துறையில் நான் அறிமுகத் தொகுப்பாளர் என்பதால் எனது அறிவிப்பாளர் திறன்களை மேம்படுத்த எதிர்ப்பார்க்கிறேன். ஊடகம் மற்றும் அது எவ்வாறுச் செயல்படுகிறது என்பதைப் பற்றி அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். எனது எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் எனது சிறந்ததை வழங்க ஒவ்வொரு அம்சத்திற்கும் முக்கியத்துவம் வழங்கி நான் நிச்சயமாக உழைப்பேன்.

உங்களின் ஆதரவாளர்களுக்கான ஒரு செய்தியைப் பகிரவும்.

எனது இரசிகர்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. எனவே, அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றிக் கூற விரும்புகிறேன். முதல் நாள் முதலே சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மக்களிடமிருந்து நான் பெற்ற அன்பும் ஆதரவும் மிகவும் உன்னதமானது. மிக்க நன்றி, அனைவரையும் மகிழ்விக்க நான் கடினமாக முயற்சிப்பேன். மேலும் அவர்களின் ஆதரவையும் அன்பையும் போற்றும் வகையில் சிறந்த படைப்பை வழங்குவேன்.