Home நாடு சபா ‘ஸ்டார்’ கட்சி பெரிக்காத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியது

சபா ‘ஸ்டார்’ கட்சி பெரிக்காத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியது

521
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : சபா மாநிலக் கட்சியான ஸ்டார் பெரிக்காத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியது.

இதனை அந்தக் கட்சியின் தலைவர் ஜெப்ரி கித்திங்கான் இன்று உறுதிப்படுத்தினார்.

சபா மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய ஜிஆர்எஸ் என்னும் காபுங்கான் ராயாட் சபா என்ற கூட்டணியில் ஸ்டார் கட்சியும் இடம் பெற்றிருக்கிறது.

#TamilSchoolmychoice

ஜிஆர்எஸ் கூட்டணி தற்போது அன்வார் இப்ராகிம் தலைமையிலான புதிய மத்திய அரசாங்கத்தை ஆதரிக்க முடிவு செய்திருப்பதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

ஜிஆர்எஸ் கூட்டணியில் சபா பெர்சாத்து, ஸ்டார், பிபிஎஸ், சபா முன்னேற்றக் கட்சி (SAPP), உஸ்னோ ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.