Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : டிசம்பர் 2022 & ஜனவரி 2023 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : டிசம்பர் 2022 & ஜனவரி 2023 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

388
0
SHARE
Ad

இந்த மாதம் டிசம்பர் 2022 – எதிர்வரும் ஜனவரி 2023 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்:

*நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை

திங்கள், 19 டிசம்பர்

வீரா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

#TamilSchoolmychoice

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ – எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: தீபன் கோவிந்தசாமி, ஷர்மேந்திரன் ரகோநாதன், தாஷா கிருஷ்ணக்குமார் & ஷாமினி ஷ்ரதா

முன்னாள் குத்துச்சண்டைச் சாம்பியனானத் தென்னவனிடம் பயிற்சிப் பெற்றத் திறமையானத் தற்காப்புக் கலைஞரான வீரா, கலப்புத் தற்காப்புக் கலைகள் (எம்எம்ஏ) சாம்பியன்ஷிப்பில் தனது உடன்பிறந்தச் சகோதரரைப் போட்டியாளராக எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறார்.

வீரா முழு மனதுடன் தன் சகோதரனுடன் போட்டியிட்டுச் சாம்பியன்ஷிப்பை வெல்கிறாரா அல்லது தனது சகோதரன் சாம்பியனாக முடிசூடத் தனது வெற்றியை விட்டுக் கொடுக்கிறாரா என்பதே கதையின் முக்கியச் சாரம்சமாகும்.

வியாழன், 22 டிசம்பர்

எட்டேக்: பார்ட் 1 (Attack: Part 1) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: ஜான் ஆபிரகாம், ஜாக்குலின் பெர்னாண்டஸ் & ரகுல் ப்ரீத் சிங்

தீவிரவாதத் தாக்குதலில் அனைத்தையும் இழந்தப் பிறகு, ஒரு சூப்பர் சிப்பாயாக மாறி, அர்ஜுன் ஷெர்கில் தேசத்திற்குச் சேவைச் செய்யத் தனது உயிரையேப் பனையம் வைக்கிறார்.

வெள்ளி, 23 டிசம்பர்

ட்ரிகர் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சி. அருண்பாண்டியன், சின்னி ஜெயந்த் & கிருஷ்ணா

கடத்தல் சம்பவத்தால் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து முன்னாள் காவலரானத் தனதுத் தந்தையைக் காப்பாற்ற ஒரு மகன் முயற்சிக்கிறார்.

குறி II சீசன் 2 (புதிய அத்தியாயம் – 7)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 8 மணி, வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்: ஹரிதாஸ்

இரண்டு ஆண்டுகளாகத் தனதுப் பதின்ம வயது மகளை 600 முறைக்கு மேல் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 48 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படியும் விதிக்கப்பட்டன.

சனி, 24 டிசம்பர்

மசூம் (Masoom) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), மதியம் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: நசிருதீன் ஷா & ஷபானா அஸ்மி
குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் செய்தப் பெரியத் தவறினால் மகிழ்ச்சியானக் குடும்பம் பலச் சவால்களைச் சந்திக்கிறது.

ஞாயிறு, 25 டிசம்பர்

420 ஐபிசி (420 IPC) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: வினய் பதக், ரன்வீர் ஷோரே, குல் பனாக் & ரோஹன் வினோத் மெரா

சிஏ கேஸ்வானி வங்கி மோசடிக்காகக் கைதுச் செய்யப்பட்டார். தனது வழக்கை எதிர்த்துப் போராடப் பீர்பால் எனும் ஒரு வழக்கறிஞரைக் கேஸ்வானி நியமித்தார். பீர்பால் கண்ணுக்குத் தெரியாதப் பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளதை உணர்ந்தார்.

அந்தே சுந்தராணி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), மாலை 5.45 மணி

நடிகர்கள்: நானி & நஸ்ரியா நஜிம்

பலப் பொய்களைக் கூறித் தங்கள் திருமணத்தைப் பற்றித் தங்களின் பெற்றோரை நம்ப வைக்க ஒரு ஜோடி முயற்சிக்கின்றனர்.

மேரே தோ அன்மோல் ரத்தன் (Mere Do Anmol Ratan) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), மதியம் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: அர்ஷத் வர்சி, முகுல் தேவ் & நம்ரதா ஷிரோத்கர்
திருமணமாகிப் பல வருடங்கள் கழித்துச் சுமன் மற்றும் மகேஷுக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது. இருப்பினும், மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால், தாயை இழந்த மற்றொருச் சிசுவைப் பற்றி அவரால் சொல்ல முடியவில்லை.

திங்கள், 26 டிசம்பர்

முட்டாக்கு (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 8 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
அமானுஷ்யம் நிறைந்திருப்பதாகக் கூறப்படும் ஒரு வீட்டை ஒரு குழு ஆக்கிரமிக்க நினைக்கின்றனர். வீட்டு உரிமையாளர் அங்கு வருகிறார். குலரத்தினம் என்பவர் டிராகுலாவாக மாறுவேடமிட்டு, வீட்டில் பேய் இருப்பதாக வதந்தியை வெற்றிகரமாகப் பரப்புகிறார்.

வீரா (புதிய அத்தியாயங்கள் – 5-8)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: தீபன் கோவிந்தசாமி, ஷர்மேந்திரன் ரகோநாதன், தாஷா கிருஷ்ணக்குமார் & ஷாமினி ஷ்ரதா
தியா வீரா மீதானத் தனதுக் காதலை வெளிப்படுத்துகிறார்.

வியாழன், 29 டிசம்பர்

ஜெர்சி (Jersey) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஷாஹித் கபூர், மிருணால் தாக்கூர் & பங்கஜ் கபூர்
கிரிக்கெட்டிலிருந்து வெளியேறிப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகுத், திறமையான ஆனால் மனச்சோர்வடைந்த முன்னாள் பேட்ஸ்மேன், தனது மகனின் ஜெர்சி ஆசையை நிறைவேற்றத் தேசிய அணியில் இடம்பிடிக்கிறார்.

வெள்ளி, 30 டிசம்பர்

நெஞ்சுக்கு நீதி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஆரி அருஜுனன், சுரேஷ் சக்ரவர்த்தி & சிவாங்கி கிருஷ்ணகுமார்

ஜாதி அடிப்படையிலானப் பாகுபாடு மற்றும் பிறக் குற்றங்களுக்காக நிராகரிக்கப்பட்டப் பிறகு, ஒரு நேர்மையான நகரப் போலீஸ் அதிகாரி சாதி அமைப்புக்கு எதிராகத் தாக்குதலைத் தொடங்குகிறார்.

குறி II சீசன் 2 (புதிய அத்தியாயம் – 8)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 8 மணி, வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்: ஹரிதாஸ்

31 வயதான ஜீன் பெரேரா சின்னப்பா என்பவர் மார்பில் பலக் கத்திக் காயங்களுடன் கொடூரமாகக் கொலைச் செய்யப்பட்டார். ஆதாரம் இல்லாததால் புதிய தடயங்கள் எதுவும் இல்லாமல், வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. நாட்டில் இதுவரை நடந்தக் கொலை வழக்குகளில் இது மிகவும் புதிரான மற்றும் பரபரப்பான கொலை வழக்குகளில் ஒன்றாக உள்ளது.

ஞாயிறு, 1 ஜனவரி

ஹீரோபந்தி 2 (Heropanti 2) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: டைகர் ஷ்ராஃப், நவாசுதீன் சித்திக் & தாரா சுதாரியா

பப்லூ ரனாவத் எனும் புத்திசாலியான ஹேக்கர், உலகின் மிகப்பெரியச் சைபர் கிரைமுக்கு மூளையாக இருந்த லைலாவைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுப்படுகிறார்.

குயின் (Queen) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), மதியம் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்: கங்கனா ரனாவத்

தனது வருங்காலக் கணவரால் தூக்கி எறியப்பட்ட, ஓர் இளம் பெண் தனதுத் தேனிலவுக்குத் தனியாக ஐரோப்பாவிற்குச் செல்கிறாள். அங்குத் தன்னைப் பற்றி ஆழமாக அறிந்துக் கொள்ளும் மகிழ்ச்சியானப் பயணத்தைத் தொடங்குகிறாள்.