Home உலகம் அமெரிக்கர்கள் என்றாலே புத்திசாலிகள் தான் ஒபாமா பெருமிதம்

அமெரிக்கர்கள் என்றாலே புத்திசாலிகள் தான் ஒபாமா பெருமிதம்

564
0
SHARE
Ad

obamaஅமெரிக்கா, ஏப்ரல் 24- பிறப்பிலேயே அமெரிக்கர்கள் புத்திசாலிகள் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆண்டு தோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான கண்காட்சியில், அமெரிக்காவின் பல மாகாணங்களில் இருந்து வந்துள்ள மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.

#TamilSchoolmychoice

இந்த மாணவர்களிடையே உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறுகையில், பொறியியல், அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய கண்டறிதல்கள் ஆகியவற்றை மேற்கொள்வதில் அமெரிக்கா அதிக முனைப்பு காட்டியுள்ளது.

நமது டி.என்.ஏ.வில் கலந்துள்ளது. இது போன்ற கண்டுபிடிப்புகளால் தான் நமது நாடு உலகில் பொருளாதார பலம் மிக்கதாக வளர்ந்துள்ளது. அறிவியல், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் உலக மக்களுக்கு  அதிக பங்களிப்பை வழங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.