Home நாடு அன்வாரின் அமைச்சரவையின் கலந்துரையாடல் கூட்டம்

அன்வாரின் அமைச்சரவையின் கலந்துரையாடல் கூட்டம்

451
0
SHARE
Ad

கோலாலம்பூர் : வழக்கமாக மலேசிய அமைச்சரவை வாரம் ஒருமுறை புதன்கிழமைகளில் கூடும். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் வேளையில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும். அன்று நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறாது.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவை உறுப்பினர்கள் கடந்த ஒரு மாத காலமாக தங்களின் பணிகளை மீள்பார்வை செய்யவும், பிரதமருடன் தங்களின் பணிகள் குறித்தும் அமைச்சுகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடல் கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றது.

ஞாயிறு விடுமுறை என்றாலும் அமைச்சர்கள் அனைவரும் இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த சந்திப்புக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மேலே காணலாம்.