முதல் ஒளிபரப்பாகும் ‘தைப்பூச யாத்திரை’ என்ற உள்ளூர் தமிழ் ஆவணப்படத்தை ஜனவரி 20, ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் கண்டு மகிழுங்கள்
கோலாலம்பூர்: ஜனவரி 20, இரவு 7 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு காணும் தைப்பூச யாத்திரை எனும் உள்ளூர் தமிழ் ஆவணப்படத்தை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.
மாறன் பெரிண்ணனின் கைவண்ணத்தில் மலர்ந்த இந்த ஆவணப்படத் தொடர் ஒரு குடும்பம், ஒரு ‘காவடித்’ தயாரிப்பாளர் மற்றும் ஒரு நடிகை ஆகியோர் முருகப்பெருமான் மீதானத் தங்களின் பக்தியைப் புரிந்துக் கொள்ள ஒரு குறிப்பிடத்தக்க ஆன்மீகப் பயணத்தைத் தொடங்குவதைச் சித்தரிக்கும்.
தைப்பூசத்தைக் கொண்டாடுவதன் பின்னணியில் உள்ள அறிவியலையும், ஆன்மீகப் பயணத்தின் ஒரு பகுதியாக வேண்டுதல்கள் மற்றும் நேர்த்திக் கடன்களின் முக்கியத்துவத்தையும் தங்கள் மகனுக்குக் கற்பிக்கும் ஆர்வமுள்ளப் பெற்றோரைக் ‘கந்தன் சரணம்’ எனும் முதல் அத்தியாயம் சித்திரிக்கும்.
#TamilSchoolmychoice
‘காவடியாம் காவடி’ எனும் இரண்டாம் அத்தியாயத்தில் ‘காவடித்’ தயாரிப்பாளர் இடம் பெறுவார். அவர் நேர்த்திக் கடன் மற்றும் தைப்பூசத்தின் போதுக் ‘காவடி’ எடுத்துச் செல்வதற்கானச் சரியான வழிமுறைகள் ஆகியவற்றைப் பற்றியப் பயனுள்ளத் தகவல்களைப் பகிர்ந்துக் கொள்வார்.
தைப்பூசத்தின் வேர்களைச் சித்தரிக்கும் பண்டைய இந்திய இலக்கியங்களின் கதைகளானப் ‘புராணங்களால்’ ஈர்க்கப்பட்டப் பிரபல நடிகை, பாஷினி சிவக்குமாரை இறுதி அத்தியாயமானக் ‘கந்த வேல்’ சித்திரிக்கும்.
தைப்பூச யாத்திரை ஆவணப்படத்தின் புதிய அத்தியாயங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 7 மணிக்கு, ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் முதல் ஒளிபரப்புக் காணும்.
மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.