Home நாடு கோபால் ஸ்ரீராம் மருத்துவமனையில் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார்

கோபால் ஸ்ரீராம் மருத்துவமனையில் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார்

523
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும் முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியுமான கோபால் ஸ்ரீராம் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

நுரையீரல் தொற்று காரணமாக கிளெனிகல்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர், தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஆகியோருக்கு எதிரான ஊழல் வழக்குகளில் அரசு தரப்பு வழக்கறிஞராக, கட்டணம் ஏதும் விதிக்காமல் ஸ்ரீராம் செயல்பட்டு வந்தார்.