சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அந்தத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா அல்லது திமுகவே நேரடியாகப் போட்டியிடுமா என்ற கேள்விகள் உலவி வந்தன.
இன்று இரவு காங்கிரஸ் கட்சியினர் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தினரில் ஒருவராக இருப்பார் என்ற ஆரூடங்களும் எழுந்திருக்கின்றன.
அதிமுக கூட்டணி சார்பில் அதிமுகவே நேரடியாகப் போட்டியிடுமா அல்லது மீண்டும் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலைப் போன்று தமிழ் மாநிலக் காங்கிரசுக்கே ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.